×

நடவடிக்கை எடுக்க கோரிக்கை முத்துப்பேட்டை தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு

முத்துப்பேட்டை, டிச.5: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டாரக் கிளையின் நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் ஆணையராக திருத்துறைப்பூண்டி வட்டார செயலாளர் வேதரெத்தினம் பணியாற்றினார். இதில் ஆர்வத்துடன் பலரும் போட்டியிட்டனர். இறுதியில் வட்டார தலைவராக வீரமணி, செயலாளராக பாஸ்கரன், பொருளாளராக கார்த்திகைசெல்வன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் துணைத் தலைவர்களாக வீரபாண்டியன், செந்தில்குமாரன், வாசுகி ஆகியோரும், துணைச் செயலாளர்களாக சரவணன், சுரேஷ், கலாராணி ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


Tags :
× RELATED உண்டியலை திருடியவர்கள் மீது இதுவரை...