×

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு திருத்துறைப்பூண்டி காமராஜர் சிலை அருகே பஸ் நிழற்குடையில் நிறுத்தப்படும் வாகனங்களால் பயணிகள் அவதி உள்ளாட்சி தேர்தலில் ஆசிரியர்களின் தேர்வு பணிகளை கணக்கிட்டு ஈடுப்படுத்த வேண்டும் மாநில தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை

திருவாரூர், டிச.5: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ஈவேரா மாநில தேர்தல் ஆணையத்திற்கு வெளியிட்டுள்ள மனுவில், தமிழகத்தில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் என்பது அறிவிக்கப்பட்டு இதற்கான வேட்புமனு தாக்கல் என்பது நாளை (6ந் தேதி) முதல் துவங்குகிறது. இந்நிலையில் இந்த வேட்புமனு வழங்கல் மற்றும் பரிசீலனை போன்ற பணிகளை மேற்கொள்ள அந்தந்த ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பணிபுரிந்து வரும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள். இந்தமுறை உதவி தேர்தல் நடத்தும் பணியினை ஏற்பதில் ஆசிரியர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இது தவிர ஒரே பள்ளியில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிய ஆணை வந்துள்ளது.
3 ஆசிரியர்கள் பணிபுரியும் பள்ளியில் 2 ஆசிரியர்கள் தேர்தல் பணி காரணமாக வெளியில் செல்ல நேரிடும் போது நடைபெற உள்ள அரையாண்டு தேர்வு பணிகள் வெகுவாக பாதிக்கப்படும் என்பதால் இதனை கணக்கில் கொண்டு பள்ளி தேர்வு பணி பாதிக்காமல் உள்ளாட்சி தேர்தல் பணிக்கு ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். மேலும் ஆசிரியர்கள் அனைத்து வகை தேர்தல் பணிகளையும் சீரும் சிறப்புடனும் மேற்கொண்டு வருவது அனைவரும் அறிந்ததே. இத்தகைய சூழலில் கடந்த கால பணிக்கு உரிய நியாயமான மதிப்பூதியம் வழங்கி, தற்போதைய தேர்தல் பணிக்கும் உரிய மதிப்பூதியத்தினை அளித்திட வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்தை கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு ஈவேரா தெரிவித்துள்ளார்.


Tags : election ,commuters ,government ,teachers ,State Election Commission ,bus shacks ,Kamarajar ,Tirupur ,
× RELATED வாக்குப்பதிவு இயந்திரங்கள்...