×

திருத்துறைப்பூண்டி நகரில் 4 நாட்களாகியும் மழைநீர் வடியவில்லை

திருத்துறைப்பூண்டி, டிச.5: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் கடந்த 4 நாட்களாக பெய்து வரும் மழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. நகரில் பல இடங்களில் நீர் தேங்கி வடிந்து உள்ளது. ஆனால் புதிய பேருந்து நிலையம் பின்புறம் நரி குறவர் சமுதாய மக்கள் வசிக்கும் வீரன் நகரில் மழைநீர் சூழ்ந்து 4 நாட்களாக வடியவில்லை. இதனால் அங்கு வசிக்கும் 100க்கும் மேற்பட்ட நரிக்குறவர் சமுதாய மக்கள் அவதிபட்டு வருகின்றனர். இதேபோல நகராட்சிக்கு உட்பட்ட நெடும்பலம் ரயில்வேகேட் அருகே உள்ள வித்துவான் மனைக்கால் தெருவில் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியிலும் 4 நாட்களாக மழைநீர் வடியாமல் உள்ளது.இதனால் வீட்டை வீட்டு வெளியேவர முடியமால் அல்லல்பட்டு வருகின்றனர். இதுகுறித்து முன்னாள் கவுன்சிலர் லட்சுமி கூறுகையில்,வித்துவான் மனைக்கால் தெருவில் நான்கு நாளாக மழை தண்ணீர் வடியாமல் வீட்டை சுற்றி சூழ்ந்து உள்ளது. இதனால் மக்கள் பெரும் சிரமப்படுகின்றனர். அடி கை பம்பில் தண்ணீர் சூழ்ந்து குடிதண்ணீர் பிடிக்க முடியவில்லை. அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பிறகு நகராட்சி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் வந்து பார்வையிட்டு சென்றும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. எனவே வித்துவான்மனைக்கால் தெருவில் நிற்கும் மழைதண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Tags : city ,
× RELATED மழை நீர் வடிகால் பணிகளை ஆய்வு