கொற்கையில் இலவசமாக வழங்கிய 4 ஆடுகள் பலி

கும்பகோணம், டிச. 5: கும்பகோணம் அடுத்த கொற்கை கிராமத்தில் கடந்த மாதம் 20ம் தேதி 286 பேருக்கு அரசு சார்பில் இலவசமாக தலா 4 ஆடுகள் வழங்கப்பட்டது. இந்நிலையில் கும்பகோணம் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 6 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த 2 நாட்களில் அரசால் வழங்கப்பட்ட கொற்கையை சேர்ந்த வளர்மதி, விஜயா, பாப்பாத்தி, சம்சாத்பேகம் ஆகியோரது 4 ஆடுகள் இறந்தது. இதுகுறித்து அப்பகுதியி–்ல் உள்ளவர்களிடம் கேட்டபோது கொற்கை கிராமத்தில் 286 குடும்பங்களுக்கு 1,200 ஆடுகள் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக மன்னார்குடி சந்தையில் ஆடுகள் வாங்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மழை, பனி காலமாக இருப்பதால் ஆடுகளை நோய் தாக்கியிருக்கலாம். இதனால் ஆடுகள் இறந்திருக்கலாம் என்று என்றனர். எனவே கொற்கை கிராமத்தில் அரசால் வழங்கிய அனைத்து ஆடுகளுக்கும் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories:

>