மேட்டுப்பாளையத்தில் 17 பேர் பலியான சம்பவம் கண்டித்து அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், டிச. 5: மேட்டுப்பாளையத்தில் 17 பேர் பலியான சம்பவத்தை கண்டித்து கும்பகோணம் மீன் மார்க்கெட் அருகில் அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணை செயலாளர் சின்னைபாண்டியன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மேட்டுப்பாளையம் அருகே சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். விபத்துக்கு காரணமான நில உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேணடுமென வலியுறுத்தப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழருவி, சட்டமன்ற தொகுதி செயலாளர் முல்லைவளவன் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertising
Advertising

Related Stories: