×

தஞ்சையில் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சை, டிச. 5: கோவை மேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் மரணத்திற்கு காரணமாக இருந்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லூரியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கல்லூரி கிளைத்தலைவர் வீரமுத்து தலைமை வகித்தார். கிளை செயலாளர் சக்திவேல் கண்டன உரையாற்றினார். மாவட்ட குழு உறுப்பினர் பிடல்காஸ்ட்ரோ முன்னிலை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தில் 17 பேர் மரணத்துக்கு நீதி வேண்டும். காவல்துறை தாக்குதலை கண்டிப்பது, போராடியவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்து அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென மாணவர்கள் வலியுறுத்தினர்.


Tags : College students ,
× RELATED மருத்துவ கல்லூரி மாணவர்கள் விசில் எழுப்பி போராட்டம்