முதியவர் தற்கொலை

திருவையாறு, டிச. 5: திருவையாறு அருகே பள்ளியக்ரஹாரம் கூடலூர் கிராமத்தை சேர்ந்த தொழிலாளி தங்கராஜ் (55). இவர் தனது மனைவியுடன் கடந்த சில ஆண்டுகளாக தில்லைஸ்தானத்தில் உள்ள தனது மகள் வீட்டில் வசித்து வருகிறார். தங்கராஜிக்க மது குடிக்கும் பழக்கம் உள்ளது.மேலும் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். கடந்த மாதம் 15ம் தேதி தில்லைஸ்தானம் அருகே வயல்வெளியில் வயிற்று வலி அதிகமானதால் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தங்கராஜ் மயங்கினார்.இதையடுத்து அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து தங்கராஜ் மகன் மோகன் (40) அளித்த புகாரின்பேரில் சப்இன்ஸ்பெக்டர் ஆனந்தன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.Tags : suicide ,
× RELATED தூக்குபோட்டு இளம்பெண் தற்கொலை