உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு

பாபநாசம், டிச. 5: பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் மணியரசன் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் ரமேஷ் வரவேற்றார். எய்ட்ஸ் பரவும் விதம், தடுக்கும் விதம் குறித்து முதுகலை தாவரவியல் ஆசிரியர் லோகநாதன் பேசினார். தேசிய மாணவர் படை அலுவலர் செல்வகுமார் நன்றி கூறினார். இதேபோல் கடற்படை தினமும் அனுசரிக்கப்பட்டது.

Tags :
× RELATED மக்கள் குறைதீர் கூட்டம் 6 பேருக்கு நலத்திட்ட உதவிகள்