×

திறக்க முடியாததால் வாகன ஓட்டிகள் அவதி பூதலூர் அரசு மருத்துவமனையில் தேங்கிய மழைநீரை அகற்றகோரி ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளி, டிச. 5: பூதலூர் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் தேங்கிய மழைநீரை அகற்றகோரி மக்கள் உரிமை கூட்டமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.பூதலூரில் நீண்டகாலமாக ஆரம்ப சுகாதார மருத்துவமனை இயங்கி வந்தது. இதையடுத்து தாலுகா மருத்துவமனையாக தமிழக அரசால் 1.12.2016ல் தரம் உயர்த்தி அரசு பொது மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டு 1.07.2017 முதல் இயங்கி வருகிறது. இதனால் சிறப்பு மருத்து வசதிகளான கண், பல் சிகிச்சை பரிவுகளும் செயல்படும் வகையில் கூடுதல் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கூடுதல் படுக்கை வசதியுடன் கட்டிடங்களும் கட்டப்பட்டுள்ளன.பூதலூரை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினசரி 500 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்று வருகின்றனர். ஓபி சீட்டு வழங்குமிடம், உள்நோயாளிகள் பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, ஆய்வகம் உள்ளிட்ட மருத்துவமனை வளாகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் தண்ணீர் தேங்கி சுகாதார கேடாக உள்ளது. இதை உடனடியாக அகற்றகோரி பூதலூர் மக்கள் உரிமை கூட்டமைப்பு தலைவர் பழ.ராஜ்குமார், புண்ணியமூர்த்தி, அருண் மாசிலாமணி, மகேந்திரன், வீரசிங்கம் உள்ளிட்டோர் நேற்று மருத்துவமனையில் தேங்கியிருந்த மழைநீரில் இறங்கி நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இந்த தகவல் கிடைத்ததும் பூதலூர் தாசில்தார் சிவகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், எஸ்ஐ சுரேஷ் மற்றும் மருத்துவ அலுவலர் தேவேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் தேங்கி நின்ற மழைநீரை டேங்கர் லாரி கொண்டு அகற்ற ஏற்பாடு செய்தனர்.அதன்பிறகு போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.

Tags : Motorists ,
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...