×

மருத்துவக்கல்லூரியில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.5லட்சம் மோசடி

புதுக்கோட்டை, டிச.5: புதுக்கோட்டையில் மருத்துவக் கல்லூரியில் வார்டுபாய் வேலை வாங்கித் தருவதாக ரூ.5லட்சம் மோச டி செய்த இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம் அகரப்பட்டி மலையாண்டி மகன் சண்முகநாதன் (77). இவர் புதுக்கோட்டை டவுன் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் தெரிவித்துள்ளதாவது: புதுக்கோட்டை சாந்தநாதபுரம் 4ம் வீதியை சேர்ந்த ராமசாமி மகன் கலியமூர்த்தி மற்றும் மருத்துவ கல்லூரி கண்காணிப்பாளராக பணியாற்றும் சீத்தாராமன் ஆகியோரிடம் சண்முகநாதன் மகன் னிவாசனுக்கு வார்டு பாய் வேலை வாங்கி தருவதாக கடந்த 2016ம் ஆண்டு ரூ.3 லட்சத்தி 50 ஆயிரம் மணம் கொடுத்துள்ளார். இந்நிலையில் சண்முகநாதனுக்கு கூறியபடி வேலை வாங்கிதரவில்லை. மேலும் கொடுத்த பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை, என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் பேரில் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதேபோல் மேலும் வார்டு பாய் வேலை வாங்கி தருவதாக புதுக்கோட்டை போஸ்நகர் தனபால் மகன் கோபால் (29) என்பவரிடம் ஒரு லட்சத்தி 50 ஆயிரம் வாங்கி ஏமாற்றியதாக கலியமூர்த்தி மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இருவர் மீது வழக்குப்பதிவு

Tags :
× RELATED ஏலச்சீட்டு நடத்தி 5 லட்சம் மோசடி...