×

தேர்தல் விதிமுறை காற்றில் பறந்தது திருமயம், அரிமளத்தில் திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பமனு கொடுத்தவர்களிடம் நேர்காணல்

திருமயம்,டிச.5: திருமயம், அரிமளத்தில் திமுக சார்பில்உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களிடம் தெற்கு மாவட்ட செயலாளர் ரகுபதி நேர்காணல் நடத்தினார்.திருமயம், அரிமளம் பகுதியில்திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு நேற்று புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளரும் திருமயம் எம்எல்ஏவுமான எஸ்.ரகுபதி தலைமையில் நேர்காணல் நடைபெற்றது.நேற்று காலை திருமயத்தில் நடைபெற்ற நேர்காணலில் 50க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நேர்காணலின் போது மாவட்ட துணை செயலாளர் சீனி பழனியப்பன்,மாவட்ட அவைத் தலைவர் பொன்துரை,மாவட்ட பொருளாலர் சர்புதீன்,திருமயம் ஒன்றிய பொறுப்பாளர் சிதம்பரம் ஆகியோர் உடனிருந்தனர்.இதனை தொடர்ந்து அரிமளம் ஒன்றியத்தில் நடைபெற்ற நேர்காணலின் போது அரிமளம் ஒன்றிய செயலாளர் பொன்.ராமலிங்கம் மற்றும் பலர் உடனிருந்தனர்.


Tags : election ,government ,DMK ,
× RELATED தமிழக அரசு எதில் வெற்றி நடை போடுகிறது...