×

பொன்னமராவதி பூங்குடி வீதி சாலையில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீர் தொற்று நோய் பரவும் அபாயம்

பொன்னமராவதி,டிச.5: பொன்னமராவதியில் உள்ள பூக்குடி வீதி சாலையில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீரால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மழைநீரை தேங்காமல் நிரந்தமாக அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரி விடுத்துள்ளனர்.பொன்னமராவதி பேரூராட்சியில் உள்ள பூக்குடி வீதியின் வடக்கு புறச்சாலையில் சிறிது மழை பெய்தால் கூட தண்ணீர் தேங்கி நிற்கும். இப்போது தொடர்ந்து பெய்த மழையினால் அதிக அளவு மழைநீர் சாலையில் தேங்கி நிற்கின்றது.இதில் கொசு உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பள்ளமாக உள்ள சாலையினை சீர் செய்து நிரந்தரமாக மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : road ,Ponnamaravathi Poongudi ,
× RELATED சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் நோய் தொற்று அபாயம்