×

சொக்கம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு தலைவர் துணைத்தலைவர் போட்டியின்றி தேர்வு

கந்தர்வகோட்டை,டிச.5: கந்தர்வகோட்டை அருகே வேம்பன்பட்டியில் வு.1684 சொக்கம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு 11 இயக்குநர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் நேற்று தலைவர் மற்றும் துணைத்தலைவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.சொக்கம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 3646 உறுப்பினர்கள் உள்ளனர். சிவசங்கரி, சுந்தரம்பாள், வள்ளியம்மை, ஜெகநாதன், மாயாவு, லதா, முருகேசன், முத்துக்குமார், சீனிவாசன், சுப்ரமணியன் மற்றும் ஜாகீர்உசேன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கும் பணி நடைபெற்றது.

இதில் தலைவராக முருகேசனும், துணைத்தலைவராக சிவசங்கரியும் ஆகிய இருவர் மட்டுமே வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். இருவர் மட்டும் வேட்பு மனுதாக்கல் செய்ததால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.அவர்களுக்கு தேர்தல் அலுவலர் சரவணகுமார் சான்றிதழ்களை வழங்கினார்.நிகழ்ச்சியில் அட்மா தலைவர் ரெங்கராஜன் மற்றும் சங்க இயக்குநர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Tags : Vice President ,
× RELATED யாழ்ப்பாணம் பல்கலை. முள்ளிவாய்க்கால்...