×

வரத்து வாரிகள் தூர்வாராததே காரணம் புதுக்கோட்டை மாவட்டத்தில்

புதுக்கோட்டை, டிச.5: தமிழக தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்தும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சுயேட்சை வேட்பாளர்கள் வேகம் காட்டாமல் சுற்றி வருகின்றனர்.தமிழகத்தில் ஊராட்சி ஒன்றியங்களுக்கு மட்டும வரும் 27ம் தேதி மற்றும் 30ம் தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டது. கடந்த காலங்களில் உள்ளாட்சி தேர்தல் அட்டவணை வெளியான பிறகு வேட்பாளர்கள் ஆர்வமுடன் களத்தில் பணியாற்றுவார்கள். குறிப்பாக கட்சி வேட்பாளர்களை விட சுயேட்சைகள் ஆரவாரம் அதிகமாக இருக்கும். கட்சி வேட்பாளர்களை காட்டிலும் அனைத்து மட்ட பதவிகளுக்கும் சுயேட்சைகளின் போட்டி கடுமையாக இருக்கும். சில நேரங்களில் சுயேட்சைகள் வெற்றியும் பெறுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக நோட்டீஸ் அடிப்பது, முக்கிய நபர்களை சந்திப்பது, வீடு, வீடுடாக சென்று பார்ப்பது, வேட்பு மனுவை தாயார் செய்வது என பல பணிகளில் சுயேட்சை வேட்பாளர்கள் ஈடுபடுவார்கள். ஆனால் தற்போது தேர்தல் தேதி வெளியான பிறகும் இதுவரை எந்த ஆயத்த பணியையும் செய்யாமல் உள்ளனர். இதனால் உள்ளாட்சி தேர்தல் களம் வெறுச்சோடி காணப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் எந்த ஒரு ஒன்றியத்திலும் ஒரு பரபரப்பும் இன்றி வழக்கம்போல் இயங்கி வருகிறது.ஆனால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் நலத்திட்ட வழங்குதல் உள்ளிட்ட பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.

Tags : Pudukkottai district ,
× RELATED மதுபிரியர்கள் மகிழ்ச்சி...