×

பொங்கல் பரிசு தொகுப்பிற்கு வாங்க கோரிக்கை 4 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்தும் 5 ஆயிரம் ஏரி, குளங்கள் நிரம்பவில்லை

புதுக்கோட்டை,டிச.5: புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து நான்கு நாட்களாக பெய்த மழையால் பல ஏரி, குளங்கள் முழு கொள்ளளவை எட்டாதாதற்கு வரத்து வாரிகளை தூர்வாராததே காரணம் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள், கண்மாய்கள் உள்ளது. மழை காலங்களில் இங்கு தேங்கும் நீரை வைத்து தொடர்ந்து முப்போவங்கள் விவசாயத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 8 ஆண்டுகளுக்கு மேல் போதிய மழையின்றி ஏரி, குளங்கள் வறண்டு போனது. இதனால் விவசாயம் படிப்படியாக குறைந்து முற்றிலும் தரிசு நிலங்களாக மாறியது. இதனால் விவசாயிகள் வேறு வழியின்று நகர் பகுதிக்கு வேலை தேடி செல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகினர். இந்நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் நல்ல மழை பெய்தது. இதனால் ஏரி, குளங்களில் சுமார் 40 சதவீதம் மழை நீர் பெருகியது. இதனை கொண்டு விவசாயிகள் நெல் விவசாயத்தில் ஈடுபட்டனர்.

தற்போது அனைத்து வயல்களில் கதிர்விடும் வகையில் பயிர்கள் வளர்ந்து நிற்கிறது. இந்நிலையில் கடந்த வாரத்தில் பல ஏரிகளில் தண்ணீர் குறைந்து இருந்தது. இதனால் விவசாயிகள் கவலையடைந்தனர். தொடர்ந்து மழை பெய்யவில்லை என்றால் பயிர்கள் கருகும் நிலை ஏற்படும் என்று நினைத்தனர். இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக புதுக்கோட்டை மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்ய தொடங்கியது. குறிப்பாக கடந்த 30ம்தேதி மற்றும் 1ம் தேதி அன்று பெய்த மழையால் மீண்டும் ஏரி, குளங்கள் நிரம்ப தொடங்கியது. தற்போது இரண்டு நாட்களாக மழையின்றி வாணம் மேகமூட்டத்துடன் காட்சியளிக்கிறது.இப்படி மழை பெய்தும் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரிகள், குளங்கள் நிரம்பாமல் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் வரத்து வாரிகளை தூர்வாராமல் இருப்பதும், ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இருப்பதும்தான் காரணம். இதனை முறையாக மழைக்கு முன்பாக செய்திருந்தால் கண்டிப்பாக பல ஏரி, குளங்களில் நிரம்பியிருக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.



Tags : lakes ,
× RELATED சென்னையின் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!