×

டேக்வாண்டோ போட்டி மங்கைமடம் ஊராட்சி பள்ளி மாணவர்கள் சாதனை

சீர்காழி, டிச.5:மாவட்ட அளவில் நடந்த டேக்வாண்டோ போட்டியில் மங்கைமடம் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.நாகப்பட்டினம் மாவட்ட அளவில் நடைபெற்ற டேக்வாண்டோ போட்டியில் சீர்காழி அடுத்த மங்கை மடம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு மாணவன் அருண்குமார் கலந்து கொண்டு தங்கப்பதக்கமும். பாலகுமரன் வெங்கலபதக்கமும் பெற்று சாதனை படைத்துள்ளனர். தங்கப்பதக்கம் பெற்ற அருண்குமார் மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளான். வெற்றிபெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் மோகன்ராஜ் ஆகியோரை தலைமை ஆசிரியர் ராசசேகர், பள்ளி மேலாண்மைகுழு தலைவர் செண்பகம், வட்டாரக் கல்வி அலுவலர் பூவராகன் லெட்சுமி. ஆசிரியகள் பெற்றோர்களும் பாராட்டினர்.

Tags : Tournament ,Taekwondo ,Mangaiyamadam Panchayat School Students Adventure ,
× RELATED உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி...