×

வேதாரண்யம் அருகே மாற்றுத்திறனாளி விஷம் குடித்து சாவு

வேதாரண்யம், டிச.5: வேதாரண்யம் அருகே மாற்றுத்திறனாளி விஷம் குடித்து பலியானார்.நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா துளசியாப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாய்பு மரைக்காயர். இவரது மகன் ஹாஜா (50). மாற்றுத்திறனாளி. இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. ஹாஜா உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். நேற்று ஹாஜா திருத்துறைப்பூண்டி சென்றுவிட்டு ஊருக்கு தனது இரு சக்கரவாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் விஷ மருந்தை அருந்தி விட்டுஆபத்தான நிலையில் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டிற்கு வந்தவரைஅக்கம் பக்கத்தினர் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்து அங்கு முதலுதவி அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி 3ம் தேதி இறந்து விட்டார். புகாரின்பேரில் வாய்மேடு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


Tags : Vedaranyam ,
× RELATED வேதாரண்யத்தில்