×

வேதாரண்யம் அருகே நர்சிங் படித்த பெண் மாயம்

வேதாரண்யம், டிச.5: வேதாரண்யம் அருகே நர்சிங் படித்த இளம்பெண் மாயமானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.வேதாரண்யம் தாலுகா வெள்ளப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மகள் லட்சுமி (25). நர்சிங் படித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். நடராஜன் டீ கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 1ம் தேதி வீட்டில் இருந்த லட்சுமி யாரிடமும் சொல்லாமல் திடீரென மாயமாகி விட்டார். பல இடங்களில் தேடியும் அவரை கண்டு பிடிக்கமுடியவில்லை. இது குறித்து நடராஜன் வேட்டைக்காரனிருப்புபோலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் திருஞானம் தீவிர விசாரணை செய்து வருகிறார்.


Tags : Vedaranyam ,
× RELATED மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது