×

கொள்ளிடம் அருகே 500 ஏக்கருக்கு வடிகாலாக மாறிய தார்சாலை மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி அமைக்க தாசில்தாரிடம் கோரிக்கை மனு

சீர்காழி, டிச. 5: மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி அமைக்க வலியுறுத்தி அனைத்து கட்சியினர் சீர்காழி தாசில்தாரிடம் கோரிக்கை மனு வழங்கினர்.நாகை மாவட்டத்திற்கு மத்திய அரசு புதிய மருத்துவ கல்லூரி அமைக்க அனுமதி வழங்கியுள்ளது. இந்த மருத்துவக் கல்லூரி நாகப்பட்டினம் அருகே ஒரத்தூர் பகுதியில் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கல்லூரியை மயிலாடுதுறை கோட்டத்தில் அமைந்துள்ள சீர்காழி, பூம்புகார், மயிலாடுதுறை தொகுதி மக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவக் கல்லூரியை அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி அமைக்க வலியுறுத்தி அனைத்துக் கட்சி சார்பில் முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் தலைமையில் திமுக நகர செயலாளர் சுப்பராயன், பாமக நகர செயலாளர் சின்னையன், மாவட்ட துணை செயலாளர் சாமிவேல்முருகன், மாவட்ட அமைப்புச் செயலாளர் பொன்னழகன், காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் குமார், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் வீரராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் செல்லப்பன், பாஜக நிர்வாகிகள் செல்வம், அருணாச்சலம், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பாண்டியன், கோடங்குடி சங்கர் உள்ளிட்ட பலர் ஊர்வலமாக சென்று சீர்காழி தாசில்தார் சாந்தியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Tags : Dasal ,Mayiladuthurai Medical College ,
× RELATED குண்டும் குழியுமாக காணப்படும் கலிதீர்த்தாள்குப்பம் தார்சாலை