×

வேதாரண்யத்தில் மழையால் வேதாமிர்த ஏரி நிரம்பியது வடிகால் பகுதியில் ஷட்டர் அமைக்க அமைச்சர் நடவடிக்கை

வேதாரண்யம், டிச.5: வேதாரண்யம் நகர் பகுதியில் உள்ள வேதாமிர்த ஏரி மழையால் நிரம்பியதையடுத்து தண்ணீர் வெளியேறாமல் தடுக்க வடிகால் பகுதியில் ஷட்டர் அமைக்க அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நடவடிக்கை மேற்கொண்டார்.வேதாரண்யம்-நாகை சாலையில் உள்ள 17 ஏக்கரில் வேதாமிர்த ஏரி அமைந்துள்ளது. ராஜராஜ சோழன் காலத்தில் வெட்டப்பட்ட இந்த ஏரியில் நாள்தோறும் சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டபொதுமக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஏரியில் தற்போது பெய்தமழையால் தண்ணீர நிரம்பியுள்ளது. இந்தநீரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென பொதுமக்கள் தமிழக ஜவுளித்துறைஅமைச்சர் ஓ.எஸ்.மணியனை சட்டமன்ற அலுவலகத்தில் நேரடியாக சந்தித்து கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையில் வேதாமிர்த ஏரியில் தேங்கியநீரை சில சமூகவிரோதிகள் ஏரியின் தெற்குபக்கம் அடைத்து வைத்திருந்த வடிகால் மதகை திறந்துதண்ணீரை வடியவைத்து விட்டனர். இதனால் ஏரியில் தண்ணீர் வெகுவாக குறையத் துவங்கியது. எனவே தண்ணீர் வடியும் மதகில் ஷட்டர் என கோரிக்கை விடுத்தனர். உடனடியாக நகராட்சிஆணையர் ரவிச்சந்திரன், பொறியாளர் பிரதான்பாபு ஆகியோரை தொடர்புகொண்டு தெற்குப்ககம் உள்ள மதகிற்கு ஷட்டர் அமைக்கும்படி தெரிவித்தார். நகராட்சி நிர்வாகம் உடனடியாக ஷட்டர் அமைக்கநடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியதாவது: வேதாரண்யம் நகரின் மிகப்பெரியஏரியான வேதாமிர் தஏரியின் கரைகளை பலப்படுத்தி அழகுபடுத்தும் பணிநடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன் ஒருபகுதியாக ஏரியின் வடபுறம் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு பொதுமக்கள் குளிப்பதற்காக படித்துறையும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகஅரசு ஏரிக்கு ரூ.7.5 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந்த நிதியில் மூன்று புறமும் தடுப்புச்சுவரும், நடைபயிற்சிக்கென்று தனிப்பாதையும், பூங்காவும் அமைக்கப்படும். மேலும் ஏரியில் மீன் பிடிப்பதற்கு குத்தகை விடப்படவில்லை. பொதுமக்கள் தூண்டில் போட்டு மீன்களை பிடித்துக்கொள்ளலாம். தெற்குபுறம் வடிகால் பகுதியில் உடனடியாக ஷட்டர் அமைக்கப்படும் மேலும் இப்பகுதியில் உள்ள மக்கள் ஒத்துழைப்பு அளித்து ஏரியின் தண்ணீரை இறைப்பதற்கு சம்மதித்தால் பணிதுவங்குவதற்கு முன் ஏரியை தூர்வாரி ஏரியின் நடுவில் அழகுக்காக சிறிய கோபுரமும் அமைக்கப்படும் என்றார். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக ஷட்டர் அமைக்கஉத்தரவிட்ட அமைச்சரை பொதுமக்கள் பாராட்டி நன்றி தெரிவித்து சென்றனர். ஒன்றிய செயலாளர் கிரிதரன், வழக்கறிஞர் சுப்பையன், நமசிவாயம், முன்னாள் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராஜரெத்தினம், இளைஞரணி அமைப்பாளர் திலபன் ஆகியோர் உடனிருந்தனர்.


Tags : Minister ,drainage area ,
× RELATED மாற்று இடத்தில் அமையும் வரை நடமாடும்...