×

அசம்பாவிதங்களை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு

சீர்காழி, டிச.5: சீர்காழி அருகே 570 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள செங்கரும்பு வயல்களை மழைநீர் சூழ்ந்துள்ளதால் அறுவடைக்கு முன் சாய்ந்து இழப்பை ஏற்படுத்துமோ என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.நாகை மாவட்டம் சீர்காழி அருகே செம்பதனிருப்பு, அல்லிவிளாகம், காத்திருப்பு, நடராஜ பிள்ளை சாவடி, இளைய மதுக்கூடம், ராதாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 570 ஏக்கரில் விவசாயிகள் செங்கரும்பு பயிரிட்டுள்ளனர். இந்த செங்கரும்புகள் நல்ல நிலையில் வளர்ந்து உள்ளன. இந்த கரும்புகள் பொங்கல் பண்டிகைக்கு அறுவடைக்கு தயாராகும். இதனை உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் வாங்கிச் செல்வார்கள். இந்த நிலையில் இந்தப் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு வயல்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் கரும்பு வளர்ச்சி ஏற்பட்டாலும் கரும்பின் இனிப்பு குறைய வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்தால் செங்கரும்பு வயலில் சாய்ந்து விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்தும் என கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகள் தெரிவிக்கின்றன.

Tags :
× RELATED போலீஸ் பாதுகாப்பு வேண்டுமா, வேண்டாமா?...