×

வாய்க்கால் தூர்வாராததால் தண்ணீர் வடிவதி்ல் சிக்கல் சீர்காழி அருகே செங்கரும்பு வயல்களை மழைநீர் சூழ்ந்தது அக்கரைப்பேட்டை மீனவ மகளிர் கூட்டுறவு சங்க தேர்தல் வாக்குசேகரிப்பதில் திமுக, அதிமுக கடும் போட்டி

நாகை, டிச.5: நாகை அக்கரைப்பேட்டை மீனவ மகளிர் கூட்டுறவு சங்க தேர்தலில் வாக்குகள் சேகரிப்பதில் திமுக, அதிமுகவினர் இடையே கடும் போட்டி ஏற்பட்டதால் அசம்பாவிதங்களை தடுக்க போலீஸ் குவிக்கப்பட்டது.நாகை அக்கரைப்பேட்டை மீனவ மகளிருக்கான கூட்டுறவு சங்க தேர்தல் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று அக்கரைபேட்டையில் வாக்குப்பதிவு நடந்தது. அக்கரைப்பேட்டை மீனவர் மகளிர் கூட்டுறவு சங்க நிர்வாகக்குழு உறுப்பினர்கள் 7 பேர் தேர்வு செய்யப்பட வேண்டும். திமுக சார்பில் 7 பேரும், அதிமுக சார்பில் 7 பேரும்இ சுயேட்சை ஒருவரும் என மொத்தம் 15 பெண்கள் போட்டியிடுகின்றனர். நடேசராஜா தேர்தல் நடத்தும் அலுவலராக பணியாற்றினார். வாக்குப்பதிவு நேற்று காலை தொடங்கியது. இதில் முக்கிய கட்சிகளான திமுக, அதிமுக மற்றும் சுயேட்சையை சேர்ந்த பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 3,445 மகளிர் வாக்குகள் அளித்து 7 உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டும்.

தேர்தலில் வாக்களிக்க ஆர்வமுடன் பெண்கள் வந்தனர். நேரம் ஆக ஆக பெண்கள் கூட்டம் அதிகமானதால் நீண்ட வரிசை ஏற்பட்டது. விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவின்போது வாக்குகளை அளிக்க வந்த பெண்களிடம் திமுக, அதிமுகவினர் வாக்குகள் சேகரிக்க தொடங்கினர். இதனால் இரண்டு கட்சியினர் இடையே வாக்குகள் சேகரிப்பதில் கடும் போட்டி ஏற்பட்டது. இதனால் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக வாக்குச்சாவடி அருகே கலவரத்தை தடுக்கும் வஜ்ரா வாகனம் வந்தது. வாக்காளர்களை வாக்குப்பதிவு மையம் அருகே நிற்கவிடாமல் போலீசார் அப்புறப்படுத்தினர். இதனால் சிறிது நேரத்தில் பதட்டம் தணிந்தது. நிர்வாககுழு உறுப்பினர்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (5ம் தேதி) நாகை மீன்வளத்துறை அலுவலகத்தில் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து வரும் 9ம் தேதி தலைவி மற்றும் துணைத்தலைவி பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. வெற்றிபெறும் தலைவி மற்றும் துணை தலைவி உறுப்பினர் சேர்க்கை, மீனவ மகளிர் சேமிப்பு நிவாரண தொகை வசூலித்தல் மற்றும் வழங்குதல் ஆகிய செயல்பாடுகளில் ஈடுபடுவார்கள்.

Tags : sugar cane fields ,district ,election ,Chikkarepattu ,Akkaraipattu Fisheries Women's Cooperative Society ,DMK ,AIADMK ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...