போக்குவரத்து விதிகளை மீறியதாக 2,184 வழக்கு பதிவு

ஈரோடு, டிச. 5: ஈரோட்டில் போக்குவரத்து விதிகளை மீறியதாக கடந்த மாதம் 2,184 வாகன ஓட்டிகள் மீது டிராபிக் போலீசார் வழக்கு பதிவு செய்து, ரூ.2.44 லட்சம் அபராதமாக வசூலித்துள்ளனர். ஈரோடு மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் வசூலிக்கப்படுகிறது. இதில், கடந்த மாதம் (நவ.,) தெற்கு போக்குவரத்து போலீசார் மாநகரில் பல்வேறு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதில், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகன ஓட்டியவர்கள், ஹெல்மெட் அணியாமல் பின்னால் அமர்ந்திருந்து பயணித்தவர் என 714 வழக்கும், மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 3வழக்கு, அதிவேகமாக வாகனத்தை ஓட்டியதாக 26, சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி சென்றதாக 30, சிக்னல்களை மீறி சென்றதாக 360, செல்போன் பேசியபடி வாகனத்தை ஓட்டியதாக 26, சீட்பெல்ட் அணியாமல் சென்றதாக 270, தாறுமாறாக வாகனத்தை ஓட்டி சென்றதாக 12 வழக்கு மற்றும் இதர வழக்குகள் என 2ஆயிரத்து 184 வாகன ஓட்டிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, ரூ.2 லட்சத்து 44ஆயிரத்து 350 அபராதமாக வசூலித்தனர்.  மேலும், மதுபோதையிலும், ஓட்டுநர் உரிமம் இல்லாமலும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக ஒருவரை பிடித்து ஈரோடு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். அந்த நபருக்கு கோர்ட் ரூ.16 ஆயிரம் அபராதம் விதித்தது. இத்தகவலை ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: