×

அமைதி பேச்சு வார்த்தையில் உடன்பாடு நெற்பயிரில் குலைநோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

குளித்தலை, டிச. 5: நெற்பயிரில் குலைநோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண் அதிகாரி ஆலோசனை தெரிவித்துள்ளார்.இது குறித்து குளித்தலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அரவிந்தன் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குளித்தலை தாலுகாவில் தற்போது சம்பா பருவத்தில் சுமார் 13 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி செய்து வருகின்றது. பூக்கும் பருவத்திலும் பால் பிடிக்கும் பருவத்தில் உள்ளது.கடந்த 10 நாட்களாக குளித்தலை பகுதியில் மழை பெய்து வருவதால் நெல் பயிரில் குளித்தலை தாலுகாவில் தற்போது சம்பா பருவத்தில் சுமார் 13 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி செய்து வருகின்றது. பூக்கும் பருவத்திலும் பால் பிடிக்கும் பருவத்தில் உள்ளது. கடந்த 10 நாட்களாக குளித்தலை பகுதியில் மழை பெய்து வருவதால் நெற்பயிரில் குலைநோய் , ஆனைக்கொம்பன் ஈஆகியவற்றின் தாக்குதல் அதிக அளவில் காணப்படுகிறது.

மேலும் குலைநோய் தாக்குதல் உள்ள பயிரில் இலையில் கணமேலும் குலைநோய் தாக்குதல் உள்ள பயிரில் இலையில் கண் வடிவில் சாம்பல் நிற புள்ளிகள் தோன்றும் பின்னர் நோய் தீவிரமடைந்தால் இலைகள் காய்ந்து பயிரில் அதிக அளவில் மகசூல் இழப்பு ஏற்படும். முன்பு நோய் தாக்குதல் தென்பட்டால் ட்ரை சைக்ள் சோல் மருந்தினை ஏக்கருக்கு 200 கிராம் என்ற அளவில் தெளிக்கவும் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதல் இருந்தால் நெற்பயிரில் கதிர் வெளிவராமல் அதற்கு பதிலாக குழல் போன்ற வெங்காய இலை வெளிவரும் இலையின் அடியில் ஆனைக்கொம்பன் ஈ யின் அல்லது கூட்டுப்புழு இருக்கும் இதனை கட்டுப்படுத்த வேப்பெண்ணெய் ஏக்கருக்கு ஒரு லிட்டர் உடன் சோப்பு கலந்து தெளிக்கவும். ஆனைக்கொம்பன் ஈ அதிகமாக பரவியுள்ள வயலில் குளோரிபரிபா 300 மில்லி அல்லது மருந்து 200 கிராம் தயா மெந்தாசி தாக்கிம் கலந்து தெளிக்கவும் இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Tags : Disease Attack ,Rice ,
× RELATED விமான நிலைய பராமரிப்பு: அதானி குழுமம் ஒப்பந்தம்