மாநகராட்சி பகுதியில் தரமான சாலை அமைக்க கலெக்டரிடம் கோரிக்கை

ஈரோடு, டிச. 5: ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கலெக்டர் கதிரவனிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியுள்ளதாவது: ஈரோடு மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம், ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் போன்ற திட்டப்பணிகளுக்காக ரோடுகள் தோண்டப்பட்டது. தற்போது ஈரோடு மாநகர் முழுவதும் தோண்டப்பட்ட ரோடுகள் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. ஆனால் இந்த பணிகள் தரமாக இருப்பதில்லை. பல இடங்களில் சாலைகளை முறையாக அமைக்காததால் வணிக நிறுவனங்களை விட ரோடுகள் மிகவும் மேடாக காட்சியளிக்கிறது. இதனால் மழைநீர் கடைகளுக்குள் புகுந்து கடையில் உள்ள இருப்பு பொருட்கள் சேதமடைந்து வருகிறது.  மேலும் பல இடங்களில் அமைக்கப்பட்ட ரோடுகள் தரமில்லாததால், விரைவில் பழுதடைந்து விடுகிறது. சாலைப்பணிகள் மேற்கொள்ளும்போது அது தரமானதாகவும், அங்கு வணிகம் செய்பவர்கள், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>