மயங்கி விழுந்த தொழிலாளி சாவு

ஈரோடு, டிச. 5:   ஈரோடு  ரயில்வே காலனியை சேர்ந்தவர் பத்மா (47). இவர் ஈரோடு ரயில்வே பார்சல்  சர்வீசில்  கிளர்க். இவரது கணவர்  முனியசாமி என்பர் கடந்த 2012ம் ஆண்டு இறந்து விட்டார். இந்த நிலையில் சரவணன் (46) என்ற கூலி தொழிலாளியை இரண்டாவதாக கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி திருமணம் செய்து  கொண்டார். சரவணனுக்கு சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்தநோய்  இருந்துள்ளது. பத்மா  மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வருவதாக சரவணனிடம் கூறி சென்றுள்ளார்.  பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் சரவணன் மயங்கி  கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பத்மா உடனடியாக சரவணனை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.  அங்கு  சரவணனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக  தெரிவித்தனர்.

Related Stories:

>