×

க.பரமத்தி ஒன்றிய பகுதியில் தைப்பொங்கலுக்காக 200 ஏக்கரில் மஞ்சள் பயிர் சாகுபடி

க.பரமத்தி, டிச.5: தைப்பொங்கலுக்காக சாகுபடி செய்த மஞ்சள் பயிர்கள் இரு ஒன்றிய பகுதியில் நன்கு வளர்ந்துள்ளது. அறுவடை காலத்தில் மஞ்சளுக்கு உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மற்றும் க.பரமத்தி அகிய இரு வெவ்வேறு ஒன்றிய பகுதியில் தைப்பொங்கலுக்காக சாகுபடி செய்த மஞ்சள் பயிர் நன்கு வளர்ந்து வருகிறது. க.பரமத்தி ஒன்றியத்திற்குட்பட்ட ராஜபுரம், சின்னதாராபுரம், அஞ்சூர், கார்வழி, மொஞ்சனூர், விஸ்வநாதபுரி, கோடந்தூர், உள்ளிட்ட ஊராட்சிகளிலும் கரூர் ஒன்றியத்தில் வேட்டமங்கலம், கோம்புபாளையம் ஆகிய ஊராட்சிகளுக்குட்பட்ட இடங்களில் மஞ்சள் பயிர் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது.கிணற்று மற்றும் ஆற்று பாசனத்தை நம்பி இரு ஒன்றிய பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் மஞ்சள் பயிரிடப்பட்டுள்ளது.இந்த மஞ்சள் பொங்கலுக்கு முன்னதாக அறுவடை செய்யப்படும். இதில் சிறிய அளவிலான மஞ்சள் தோகையுடன் பறிக்கப்பட்டு பொங்கல் பண்டிகைக்கு விற்பனை செய்யப்படும். மற்ற பெரும்பாலான மஞ்சள் வெட்டியெடுத்து பதப்படுத்தப்பட்டு சந்தைகளுக்கு கொண்டு செல்லப்படும். இந்த வகையில் பயிரிடப்பட்டுள்ள மஞ்சள் நோய் தாக்குதல் இல்லாமல் தற்போது செழித்து வளர்ந்துள்ளது.இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், மாவட்டத்தில் போதிய பருவமழை, கிணற்று பாசனம், ஆறு, வாய்க்கால் பாசனத்தை நம்பி இப்பகுதியில் மஞ்சள் சாகுபடி செய்துள்ளோம் குறைந்தளவு நீரிலும் மஞ்சள் துளிர் விட்டு நன்று வளர்ந்துள்ளது. இதனால் அறுவடை காலத்தில் விளைச்சல் அமோகமாக இருக்கும் என நம்பிக்கையுள்ளது. எனவே இந்தாண்டு மஞ்சளுக்கு உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Tags : paddy fields ,
× RELATED சிங்கம்புணரி பகுதியில் முளைவிடும் நெல்மணிகள் கலங்கும் விவசாயிகள்