×

காவலர்கள் எதிர்பார்ப்பு டூவீலரை திருட முயன்றவர் கைது

கரூர், டிச. 5: கரூர் ரயில்வே நிலையம் அருகே நின்று கொண்டிருந்த இரண்டு சக்கர வாகனத்தை திருட முயன்ற நபரை டவுன் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.கரூர் ரயில்வே நிலைய வளாக பகுதி அருகே காந்திகிராமம் பகுதியை சேர்ந்த சிங்கரம் என்பவர் ரூ. 50ஆயிரம் மதிப்புள்ள இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றார். அப்போது அங்கு வந்த திருவையாறு பகுதியை சேர்ந்த அகஸ்டின் என்பவர் பைக்கை திருட முயன்ற போது கையும் களவுமாக பிடிபட்டு, டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டு, அகஸ்டின் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு உள்ளதாக கூறி கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Guardsmen ,Duveler ,
× RELATED செல்போனில் புகைப்படம் எடுக்க...