பவானி அருகே கொப்பு வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தம்

பவானி, டிச. 5:  பவானி அருகே சின்னியம்பாளையத்தில் கொப்பு வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நீதிமன்றத் தடை உத்தரவால் நிறுத்தப்பட்டது.  பவானியை அடுத்த சின்னியம்பாளையத்தை சேர்ந்தவர் குப்புசாமி, விவசாயி. இவரது நிலத்துக்கு பாசன வசதிக்காக கொப்பு வாய்க்கால் இருந்து வந்துள்ளது. இந்த வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டதால் விவசாய நிலத்துக்கு தண்ணீர் வருவது பாதிக்கப்பட்டது. இதையடுத்து, விவசாயி குப்புசாமி கொப்புவாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் அளித்திருந்தனர். இதையடுத்து, பவானி தாசில்தார் பெரியசாமி, மண்டல துணைத் தாசில்தார் அதிர்ஷ்டராஜ், வருவாய் ஆய்வாளர் மணிமேகலை, கிராம நிர்வாக அலுவலர் செந்தில் உள்ளிட்டோர் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதற்கு, அப்பகுதியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.  மேலும், ஆக்கிரமிப்பு தொடர்பாக, உள்ளது உள்ளபடி தொடர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டதால், கொப்புவாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றாமல் வருவாய்த்துறை அதிகாரிகள் திரும்பி சென்றனர். இதுகுறித்து, உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: