×

மாவட்ட நீதிபதி தகவல் பசுபதிபாளையம் மேம்பால அணுகு சாலையில் இருந்து காவல் நிலையத்திற்குள் மழை நீர் புகாமல் தடுக்க நடவடிக்கை

கரூர், டிச. 5: கரூர் பசுபதிபாளையம் மேம்பால அணுகு சாலையில் மழைநீர் காவல்நிலையத்தில் புகுந்து விடாமல் தடுக்க வடிகால் அமைக்க வேண்டும் என காவலர்கள் எதிர்பார்க்கின்றனர்.கரூர் பசுபதிபாளையம் காவல்நிலையம் முன்பு பசுபதிபாளையம் அமராவதி உயர்மட்ட பாலத்தின் அணுகுசாலை உள்ளது. நிலையம் முன்பு பாலத்தின் இறக்கம் உள்ளது. மேலும் நிலையத்தின் எதிரே உள்ள தார்சாலை புதிதாக போடப்பட்டதால் சாலையின் உயரம் அதிகரித்து விட்டது. அவ்வப்போது பெய்யும் மழைநீரானது பள்ளமான பகுதியில் இருக்கும் காவல்நிலையத்தின் உள்ளே புகுந்து விடுகிறது.காவல்நிலையத்தின் முன்பகுதியை மேடாக்கி உயரமாக்க வேண்டும். வடிகால் அமைக்க வேண்டும். அப்போது தான் நீர் புகுந்து வருவதை தடுக்க முடியும். எனவே மழைநீர் உள்ளே வராமல் தடுக்க வேண்டும் என காவலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : District Magistrate ,
× RELATED பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட 45 நாள்...