×

14ம் தேதி நடக்கிறது

கரூர், டிச. 5: கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் டிசம்பர் 14ம்தேதி அன்று லோக் அதாலத் நடைபெறவுள்ளதாக மாவட்ட நீதிபதி நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.லோக் அதாலத் நடைபெறுவது குறித்து மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர் நிருபர்களிடம் தெரிவித்துள்ளதாவது:டிசம்பர் 14ம்தேதி அன்று மெகா லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவின்படி நடைபெறவுள்ளது.இரண்டு மாதங்களுக்கு மேல் நிலுவையில் உள்ள வழக்குகள், வழக்குகளாக மாற வாய்ப்புள்ள பிரச்னைகள் ஆகியவற்றுக்கு இதில் தீர்வு காணப்படும். கரூர் மற்றும் குளித்தலை நீதிமன்றங்களில் 6 அமர்வுகள் அமைக்கப்பட்டு ஆயிரம் வழக்குகள் உட்பட 4500 வழக்குகள் சமரச தீர்வுக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. தமிழகத்தில் உள்ள சிறிய மாவட்டங்களில் அதிக வழக்குகள் முடித்த மாவட்டங்களில் கரூர் மாவட்டமும் ஒன்றாக உள்ளது.

மேலும், 2ம்தேதி முதல் 13ம்தேதி வரை குறிப்பிட்ட நேரத்தில் இழுபறியில் உள்ள வழக்குகள் சம்பந்தமானவர்கள் வரவழைக்கப்பட்டும் தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், லோக் அதாலத்தின் போது, வங்கி கடன் போன்ற பிரச்னை குறித்தும் நேரில் வந்தாலும் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.பேட்டியின் போது, சார்பு நீதிபதி மோகன்ராம், முதன்மை குற்றவியல் நீதிபதி கோபிநாத், விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி சசிகலா உட்பட அனைத்து நீதிபதிகளும் உடனிருந்தனர்.
இந்த நிகழ்வினை தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்தில், டிசம்பர் 14ம்தேதி அன்று நடைபெறவுள்ள லோக் அதாலத் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கோலத்தினை அனைத்து நீதிபதிகளும் பார்வையிட்டனர்.

Tags :
× RELATED வங்கியாளர்கள் கண்காணிக்க வேண்டும்...