×

பாத்தி அமைத்து வெங்காயம், கடலை சாகுபடி மின்வாரிய கேங்மேன் பதவிக்கான உடற்தகுதி தேர்வு துவக்கம்

கரூர்,டிச.5: மின்வாரிய கேங்மேன் பதவிக்கான கேங்மேன் பயிற்சி உடற்தகுதித்தேர்வு நடைபெற்றது.தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் கரூர் வேப்பம்பாளையம் துணை மின்நிலைய வளாகத்தில் நேற்று மின்வாரிய கேங்மேன் உடற்தகுதித் தேர்வு நடைபெற்றது. கேங்மேன் பயிற்சி, சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெற்றது. கரூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் வினோதன் தலைமையில் அதிகாரிகள் இதனை நடத்தினர். 1716பேருக்கு சான்றிதழ் சரிபார்த்தல், உடற்தகுதி தேர்வு நடைபெற உள்ளது.
கரூர் மாவட்டம் மட்டுமின்றி அருகில் உள்ள மாவட்ட பகுதியில் உள்ளவர்களுக்கும் இங்கு சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்தகுதி தேர்வு நடைபெறுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.டிசம்பர் 2ம்தேதி முதல் வரும் 11ம்தேதி வரை இந்த தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டதையடுத்து 2 மற்றும் 3ம்தேதிகளில் தேர்வுநடைபெறவில்லை நேற்று முதல் துவங்கியுள்ளது. தேர்வுநடைபெறாத இரண்டுநாட்களுக்கு தேதி விண்ணப்பதாரர்களுக்கு பிறகு அறிவிக்கப்படும் என மின்சார வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED ஆத்ம நேச ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி விழா