×

பொங்கல் பரிசு வழங்குவது எப்போது? அதிகாரிகள் அறிவிக்காததால் பொதுமக்கள் குழப்பம்

கரூர், டிச. 5: பொங்கல் பரிசு எப்போது வழங்கப்படும் என அதிகாரிகள் அறிவிக்காததால் மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்காக ரேசன் கார்டுகளுக்கு ரூ.1000 ரொக்கம், தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, 20 கிராம் முந்திரி, திராட்சை, ஏலம் 5 கிராம், கரும்பு அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அறிவித்தது. கடந்த ஆண்டு பொங்கலையொட்டி ஜனவரி மாதத்தில் வழங்கப்பட்டது. தற்போதோ சென்னையில் முதல்வர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திட்டத்தை துவக்கி வைத்தார். இதனையடுத்து கரூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு எப்போது வழங்கப்படும் என அனைத்து ரேசன்கார்டுதாரர்களும் எதிர்பார்த்துள்ளனர். ரேசன் கடைக்கு சென்று தொடர்ந்து கேட்டு வருகின்றனர். அறிவிப்பு இல்லை என்பதே பதிலாக கூறப்பட்டு வருகிறது.

அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது. ரொக்கப்பணம் கரூர் மாவட்டத்திற்கு வந்து சேர வேண்டும். மேலும் பச்சரிசி, சர்க்கரை போன்றவையும் இன்னமும் ஒதுக்கீடு பெறப்படவில்லை. கரும்பு சீசன் இன்னமும் தொடங்கவில்லை. விற்பனைக்கு வந்த பின்னரே கரும்பு கொள்முதல் செய்ய இயலும். அறிவிப்பு வந்தாலும் மேற்கண்ட பொருட்கள் கொள்முதல் செய்யப்பட வேண்டும். மேலும் தலா ரூ.1000 கொடுப்பதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு வந்து அதனை ரூ.1000மாக தினமும் வங்கியில் போய் மாற்ற வேண்டும். நிதியை ஐநூறு ரூபாய்களாக மாற்றுவதே பெரும் வேலையாக இருக்கும் என்றனர்.கரூர் மாவட்டத்தில் 12மாவட்ட ஊராட்சிவார்டு உறுப்பினர் பதவி, 115ஊராட்சி  ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி,  157கிராம ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கும்,  1,401 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 1,685 பதவிகளுக்கான  தேர்தல் நடைபெற உள்ளது.

Tags :
× RELATED தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்