×

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

நெல்லை, டிச. 5: நெல்லை அருகே ராஜவல்லிபுரம் இந்திரா காலனியை சேர்ந்த கணேசன் மகன் அருண்குமார் (29). இவர் மீது தேவர்குளம் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. தற்போது இவர் மற்றொரு வழக்கில் கைதாகி பாளை. சிறையில் உள்ளார். இந்நிலையில் அருண்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்பி ஓம்பிரகாஷ் மீனா, கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீசுக்கு தேவர்குளம் (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் சிவகுமார் பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்தரவின் பேரில் தேவர்குளம் போலீசார், சிறையில் உள்ள அருண்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

Tags : Arrest ,
× RELATED சீரமைக்க மக்கள் வலியுறுத்தல் உதயநிதி...