×

சிவந்திபுரம் பாலம் உடைந்தது

வி.கே.புரம், டிச. 5:சிவந்திபுரத்தில் தொடர்மழை காரணமாக சாலை பாலத்தின் அடிப்பாகம் உடைந்து விழுந்துள்ளது. இந்த பாலத்தை விரைந்து சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
வி.ேக.புரம் அருகே சிவந்திபுரம் ஊராட்சிக்குட்பட்ட  காமராஜ் நகரில் இருந்து சின்ன சங்கரன்கோவில் செல்வதற்கான இணைப்பு சாலை உள்ளது. இச்சாலை செல்லும் வழியிலுள்ள பாலம், தொடர் மழையின் காரணமாக ஒரு பகுதி உடைந்துள்ளது. இந்த பாலத்தின் அடிப்பகுதியில் உள்ள கற்கள் எல்லாம் உடைந்து விழுந்துள்ளன. இதனால் பாலம் எந்த நேரத்திலும் உடையும் நிலையில் உள்ளது. இந்த வழியாகத்தான் இங்குள்ளவர்கள் சின்ன சங்கரன்கோவில், கோடாரங்குளம் போன்ற பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். எனவே பாலத்தை விரைந்து சீரமைக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். தகவலறிந்த அம்பை ஏபிடிஓ சண்முகநாதன், உடைந்த பாலத்தை பார்வையிட்டார். தொடர்ந்து இப்பாலம் விரைவில் சீரமைக்கப்படும் என்று தெரிவித்தார். அவருடன் சிவந்திபுரம் ஊராட்சி செயலர் வேலு, சுகாதார மேற்பார்வையாளர் பெல்பின் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Sivanthipuram ,
× RELATED மரப்பாலம் அருகே அந்தரத்தில் தொங்கும் சாலை