×

சாம்பவர்வடகரையில் சாக்கடையாக மாறிய தெருக்களில் பெண்கள் நாற்றுநட்டு போராட்டம்

சுரண்டை, டிச. 5:  சுரண்டை அருகே உள்ள சாம்பவர்வடகரையில் தெருவில் தேங்கி நின்ற சாக்கடை நீரில் நாற்று நட்டு பெண்கள் போராட்டம் நடத்தினர். சாம்பவர்வடகரையில் உள்ள தெருக்கள் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்று காட்சியளித்தது. தெருக்களை சீரமைத்து தரக்கோரி பொதுமக்கள் நீண்டகாலமாக கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை காரணமாக தெரு முழுவதும் மழை நீரில் சாக்கடை நீரும் கலந்து சகதிக்காடாக காட்சியளித்தது. குறிப்பாக 5வது வார்டுக்குட்பட்ட தெற்கு யாதவர் தெரு மற்றும் 12வது வார்டுக்குட்பட்ட ஆசாத் நகர் 1வது தெரு ஆகியவை மக்கள் நடமாட முடியாத அளவிற்கு சேறும், சகதியுமாக மாறியுள்ளன. இதையடுத்து நேற்று தெற்கு யாதவர் தெரு மக்களும், ஆசாத் நகர் பொது மக்களும் தெருக்களில் நாற்றுநட்டு போராட்டம் நடத்தினர். தங்கள் பகுதி தெருக்களை சீரமைக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.


Tags : streets ,
× RELATED மழையால் சேறும் சகதியுமாக மாறிய சாலையில் மக்கள் நாற்று நடும் போராட்டம்