செங்குளத்தில் கனமழைக்கு வீடு இடிந்தது

பாப்பாக்குடி, டிச. 5: பாப்பாக்குடி அருகே உள்ள செங்குளம் பட்டவிருத்தி தெருவை சேர்ந்த பரஞ்சோதி (72). இப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையின் காரணமாக நேற்று இவரது வீட்டின் முன்பக்க சுவர் இடிந்து விழுந்தது. இதனால் வீட்டினுள் இருந்த பொருட்கள் சேதமானது. வீட்டின் மற்ற பகுதிகளும் இடிந்து விழும் நிலையில் இருந்ததால் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதி மக்கள் அனைவரும் சேர்ந்து வீட்டை இடித்து தரைமட்டமாக்கினர். வருவாய்த்துறை அதிகாரிகள் இந்த வீட்டை பார்வையிட்டு பரஞ்சோதிக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : downpour ,bungalow ,house ,
× RELATED முட்டுக்காடு கடற்கரையோரம் விதிகளை...