சங்கரன்கோவிலில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மாநில மராத்தான் போட்டி அமைச்சர் ராஜலட்சுமி துவக்கி வைத்தார்

சங்கரன்கோவில், டிச. 5: சங்கரன்கோவிலில் நடந்த மாநில சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மராத்தான் போட்டியை அமைச்சர் ராஜலட்சுமி துவக்கி வைத்தார். சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூர் மலைவேல் பவுண்டேசன் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை வலியுறுத்தி ஆண், பெண் இருபாலருக்கும் மாநில அளவிலான மாரத்தான் போட்டி நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். கோயில் வாசல் முன்பு போட்டியை அமைச்சர் ராஜலெட்சுமி கொடியசைத்து துவக்கி வைத்தார். ஆண்களுக்கு 20 கிமீ தூரமும், பெண்களுக்கு 10 கிமீ தொலைவும் போட்டி தூரமாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.தொடர்ந்து ராஜபாளையம் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் கல்லூரி மாணவ, மாணவியருக்கு கலை, இலக்கிய போட்டிகள் நடந்தது. மனோகரன் எம்எல்ஏ, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி, மலைவேல் தொண்டு நிறுவன நிர்வாக அறங்காவலர் கணபதி, நெல்லை கூட்டுறவு அச்சக சங்க தலைவர் கண்ணன், அதிமுக ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், வேல்முருகன், நெல்லை பேரங்காடி துணை தலைவர் வேல்சாமி, நகர ஜெ. பேரவை செயலாளர் சவுந்தர், பாஜ ஒன்றிய பொதுச்செயலாளர் சண்முகவேல், உடற்கல்வி இயக்குநர் நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Related Stories: