×

பண்பொழியில் சருகுமான் குட்டி சிக்கியது

செங்கோட்டை, டிச. 5: பண்பொழியில் ஊருக்குள் வந்த சருகு மான்குட்டியை பொதுமக்கள் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். செங்கோட்டை அடுத்து மேற்குத்தொடர்ச்சி மலையருகே அமைந்துள்ள பண்பொழியில் அரியவகையான சருகுமான் குட்டி புகுந்தது. இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள், சருகுமான் குட்டியை பிடித்து கடையநல்லூர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனச்சரகர் செந்தில்குமார் அறிவுரைப்படி மேக்கரை பீட் வனவர் அருமைக்கொடி மற்றும் வனக்காவலர்கள் விரைந்து வந்து சருகு மான்குட்டியை மீட்டனர். மேலும் மானை கூண்டில் அடைத்து எடுத்துச் சென்று மேக்கரை காட்டுப்பகுதியில் விட்டனர்.

Tags : Saruman ,
× RELATED தமிழ் மொழி, கலாச்சாரத்தை மத்திய அரசு...