×

கார்த்திகை தீபத்திருவிழா 4ம் நாள் உற்சவம் வெள்ளி கற்பக விருட்சத்தில் அண்ணாமலையார் பவனி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

திருவண்ணாமலை, டிச.5: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவின் 4ம் நாளான நேற்று இரவு வெள்ளி கற்பக விருட்சத்தில் அண்ணாமலையார் பவனி வந்தார். மாடவீதியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்து சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி தினமும் பகலில் விநாயகர், சந்திரசேகரரும், இரவில் பஞ்சமூர்த்திகளும் மேள, தாளம் முழங்க மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். விழாவின் 4ம் நாளான நேற்று காலை 11.30 மணியளவில் ராஜகோபுரம் எதிரில் அமைந்துள்ள அலங்கார மண்டபத்தில் இருந்து மேளதாளம் முழங்க வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும், தங்க நாக வாகனத்தில் சந்திரசேகரரும் மாடவீதியில் பவனி வந்தனர். அப்போது மழை பெய்தது. ஆனால் மழையை பொருட்படுத்தாமல் திரளான பக்தர்கள் மாடவீதியில் திரண்டிருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

இதனையடுத்து இரவு 10 மணிக்கு அலங்கார மண்டபத்தில் இருந்து 3ம் பிரகாரத்தை வலம் வந்த பஞ்சமூர்த்திகள் ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பின்னர் `அண்ணாமலையாருக்கு அரோகரா'' என பக்தர்கள் முழங்க வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும், வெள்ளி மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியரும், வெள்ளி கற்பக விருட்சத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாரும், வெள்ளி காமதேனு வாகனத்தில் பராசக்தி அம்மனும், வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் மாடவீதியில் மேளதாளம் முழங்க பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.இதில், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மாடவீதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்து பஞ்சமூர்த்திகளை தரிசனம் செய்தன

Tags : devotees ,Deepavithra Festival ,Swamy Darshanam ,Annamalaiyar Bhavani ,
× RELATED ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு