ஓட்டல் ஊழியரை கடத்தி 2 லட்சம் பணம் கேட்டு மிரட்டல்: நண்பன் உள்பட 4 பேரிடம் விசாரணை

சென்னை:  திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர் முகமது மேமுன் மியா (20). சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வருகிறார். கடந்த திங்கள்கிழமை திரிபுரா மாநிலத்தை சேர்ந்த நண்பர் சஞ்சிவ் அழைத்ததாக ஓட்டலில் சொல்லிவிட்டு சென்றுள்ளார். பிறகு இரண்டு நாட்களாக வேலைக்கு வரவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முகமது மேமுன் மியா திடீரென ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்று அளித்தார்.  அந்த புகாரில், ‘என்னை திரிபுரா மாநிலத்தை சேர்ந்த சஞ்சிவ் (24) என்பவர் ஆட்டோவில் கடத்தி சென்று பூந்தமல்லி அருகே உள்ள காட்டுப்பாக்கம் வீட்டில் அடைத்து வைத்து கத்திமுனையில் ஊரில் உள்ள தந்தைக்கு போன செய்து 2 லட்சம் பணம் கேட்டு மிரட்டினார்.

Advertising
Advertising

அவ்வளவு பணம் எங்களிடம் இல்லை என்று அவர் தெரிவித்தார். பிறகு 20 ஆயிரம் தருவதாக கூறினார். அந்த பணத்தை சென்னையில் வேலை ெசய்து வரும் எனது சகோதரன் கொண்டு வந்து கொடுப்பதாக உறுதியளித்தார். ஆனால் சகோதரனும் பணத்தை எடுத்து வரவில்லை. இதையடுத்து வேறு வழியின்றி கடத்திய எனது நண்பனே மீண்டும் ஆட்டோவில் அழைத்து வந்து விட்டுவிட்டு சென்றுவிட்டார். எனவே கடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறி இருந்தார். அதன்படி போலீசார் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த சஞ்சிவ் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது சொந்த மாநிலத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் வாலிபரை கடத்தியது தெரிந்தது. இதையடுத்து 4 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: