×

செங்குன்றம் அருகே ஏடிஎம் இயந்திரம் உடைத்து கொள்ளை முயற்சி

புழல், டிச. 5:  செங்குன்றம் - ஆவடி சாலையில் எல்லம்மன்பேட்டை சிட்கோ மகளிர் தொழில் பூங்கா உள்ளது. இதன் அருகில் தனியார் வங்கி ஏடிஎம் மையம் உள்ளது. இந்த மையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு வாலிபர் புகுந்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றார். அப்போது ஏற்பட்ட சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்த சிலர், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் செங்குன்றம் போலீசார் விரைந்து வந்து ஆய்வு செய்தனர். அப்போது அங்கு ஏடிஎம்  இயந்திரம் உடைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அங்குள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர்.  அதில் பதிவாகியிருந்த நபரின் அடையாளத்தை வைத்து எல்லம்மன்பேட்டை, காட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை செய்தனர்.

அப்போது ஒரு வீட்டில் பதுங்கி இருந்த நபரை சந்தேகத்தின்பேரில் பிடித்தனர்.  கிடுக்கிப்பிடி விசாரணையில், பணம் கொள்ளையடிப்பதற்காக ஏடிஎம் இயந்திரத்தை உடைத்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை செய்ததில் பீகார் மாநிலத்தை சேர்ந்த பரத் கிரி (18) என ெதரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், வேறு குற்றசம்பங்களில் ஈடுபட்டுள்ளாரா? அவருடன் வேறு யாராவது வந்தார்களா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.  Tags :
× RELATED தலைவாசல் அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி