×

5,19,334 குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுடன் செங்கரும்பு கிடைக்குமா?

திருவள்ளூர், டிச. 5: திருவள்ளூர் மாவட்டத்தில் செங்கரும்பு சாகுபடி இல்லாததால் வெளிமாவட்டத்தை நம்பி கூட்டுறவு துறை உள்ளது. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பண்டிகைக்குள் பொங்கல் பரிசுடன் செங்கரும்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பொங்கல் பண்டிகை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் 5,19,334 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளன. இக்குடும்ப அட்டைதாரர்களுக்கு, பரிசு பொருளுடன் இரண்டு அடி நீள செங்கரும்பு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைகளுக்கு தேவையான செங்கரும்பு, கூட்டுறவு துறையின் மூலம் கொள்முதல் செய்து, மாவட்ட வழங்கல் துறைக்கு வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் செங்கரும்பு சாகுபடி இல்லாததால் கடும் தட்டுப்பாடு உள்ளது.
இதனால் வெளி மாவட்டத்தில் இருந்து செங்கரும்பு கொள்முதல் செய்ய வேண்டிய நிலைக்கு கூட்டுறவு துறை தள்ளப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் கடந்த மாதமே வியாபாரிகளுக்கு, செங்கரும்பு விலை நிர்ணயம் செய்து விற்றுவிட்டதால், திருவள்ளூர் மாவட்டத்துக்கு தேவையான செங்கரும்பு, முழுமையாக கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘வெளி மாவட்டங்களில் இருந்துதான் செங்கரும்பு கொள்முதல் செய்து அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க வேண்டும். கடலூர், விழுப்புரம் உட்பட பல மாவட்டங்களுக்கு சென்று 5,19,334 குடும்பத்தினருக்கு தேவையான கரும்பு கொள்முதல் செய்யும் பணியை ஒரு வாரத்துக்குள் முடிக்க ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர். ஆனால், ஏற்கனவே வியாபாரிகள் கரும்புக்கு விலை நிர்ணயித்து விவசாயிகளிடம் ஆர்டர் கொடுத்துள்ளதால், தேவையான அளவு கரும்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கரும்பு வழங்குவது முடியாத காரியம்’ என்றார். 

Tags : Family card holders ,
× RELATED தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும்...