×

ஆவடி மாநகராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டி விருப்பமனு செய்த திமுகவினருக்கு நேர்காணல்

ஆவடி, டிச.5:  ஆவடி மாநகராட்சியில் உள்ள கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் ஆவடி மாநகர அலுவலகத்தில் நேற்று காலை நேர்காணல் நடத்தப்பட்டது.  மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர், 48 வார்டுகளில்  போட்டியிட விருப்ப மனு அளித்த 142 பேரிடம்  கட்சியில் பொறுப்பு, ஆற்றிய பணிகள், போராட்டத்தில் பங்கேற்றது, சிறை சென்றது தொடர்பான பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.  மேலும், ஆவடி மாநகராட்சி, 23வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விருப்ப மனு கொடுத்திருந்த மாவட்ட செயலாளர் சா.மு.நாசரிடம், மாவட்ட அவைத்தலைவர் திராவிடபக்தன் நேர்காணல் நடத்தினார். இதில் ஆ.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ, மாவட்ட அவைத்தலைவர் திராவிடபக்தன், மாவட்ட துணைச்செயலாளர் நடுக்குத்தகை ரமேஷ், ஆவடி மாநகர செயலாளர் ஜி.ராஜேந்திரன், அவைத்தலைவர் ருக்கு, துணைச்செயலாளர் பேபி சேகர், மாநகர நிர்வாகிகள் சண்பிரகாஷ், கலை சேகர், நளினி கோபி, வக்கீல் சேகர், பொன் விஜயன், பாதாகை சிங்காரம் மற்றும் வழக்கறிஞர்கள் புரட்சிதாசன், ரவிக்குமார், வட்ட செயலாளர்கள், துணை அமைப்புகளின் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Avadi Corporation Ward Councilor ,
× RELATED பிப். 8, 9ம் தேதிகளில் உரிமையியல் நீதிபதி பதவிக்கு நேர்காணல்