×

திருவள்ளூர் வீரராகவர்கோயில் குளத்துக்கு தண்ணீர் வரும் பாதையை மாற்றி அமைக்க வேண்டும்

திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராக பெருமாள் கோயில் குளத்திற்கு தண்ணீர் கொண்டுவரும் பாதையை மாற்றி அமைக்கக்கோரி, நகராட்சி ஆணையரிடம்  வியாபாரிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர்  தி.ராசகுமார் கொடுத்துள்ள  மனுவின் விவரம்:
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில் குளத்திற்கு, பட்டறைபெரும்புதூர் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றுப்படுகையில் இருந்து பைப்லைன் மூலம் தண்ணீரை கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கென ராட்சத பைப்புகளும் ஆங்காங்கே கொண்டுவந்து இறக்கிவைக்கப்பட்டு உள்ளது. தற்போது, திருவள்ளூர் பஜார் வழியாக குழாய் பதிக்கும் பணி செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. ஏற்கனவே, அடிக்கடி சாலை மீது சாலை போட்டதால் பஜார் வீதி மேடாகவும், கடைகள் பள்ளத்திலும் உள்ளது. இந்நிலையில் அவ்வழியாக பைப்லைன் புதைத்தால் மக்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும். பட்டறைபெரும்புதூரில் இருந்து டோல்கேட், சி.வி.நாயுடு சாலை வழியாக குளத்துக்கு பைப்லைன் அமைத்து தண்ணீர் கொண்டு செல்ல வழி இருக்கிறது.

சி.வி.நாயுடு சாலையின் குறுக்கே பெரும்பாக்கம் ஏரியின் கலங்கல்  நீர், புங்கத்தூர் ஏரியின் மதகு நீர் ஒன்றாக சேர்ந்து குளத்திற்கு செல்லும் வகையில் வழி உள்ளது. எனவே, பொதுப்பணித்துறையினர் குழாய் பதிக்கும் பணியை சி.வி.நாயுடு சாலை வழியாக அமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், வியாபாரிகள் அனைவரும் ஒன்றுகூடி அடுத்தகட்ட போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இவ்வாறு மனுவில் உள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட நகராட்சி ஆணையர், மனுமீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அப்போது, வியாபாரிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் டி.விக்னேஸ்வரன், த.பாலாஜி உட்பட பலர் உடனிருந்தனர்.



Tags : Thiruvallur Veeraragavarkoil ,pond ,
× RELATED மதுராந்தகத்தில் பாசி படர்ந்து...