கோவில்பட்டி நேஷனல் கல்லூரியில் பேராசிரியர்களுக்கு மேம்பாட்டு பயிற்சி

கோவில்பட்டி, டிச. 5: கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் தொழில்முனைவோர் பேராசிரியர்களுக்கான மேம்பாட்டு பயிற்சி முகாம் துவங்கியது. கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் தொழில்முனைவோர் ஆசிரியர்  மேம்பாட்டு பயிற்சி முகாம் நேற்று துவங்கியது. துவக்க விழாவிற்கு கல்லூரி முதல்வர் காளிதாச முருகவேல் தலைமை வகித்தார்.  மனிதவள உதவிப் பேராசிரியர் சக்தி வரவேற்றார். இடிசெல் ஒருங்கிணைப்பாளர்  சங்கர் ஆசிரியர்களுக்கான மேம்பாட்டு பயிற்சிகள் குறித்துப் பேசினார்.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மதுரை  தொழில்முனைவோர் மேம்பாட்டு மைய பயிற்சி அதிகாரி மோகன்ராம், சிறப்புரையாற்றினார். தொடர்ந்து இரு வாரம் நடைபெறும்  இம்முகாமில் பங்கேற்றுள்ள 20க்கும்  மேற்பட்ட பேராசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஏற்பாடுகளை கல்லூரித் தாளாளர்  அருணாசலம், கல்லூரி இயக்குநர் சண்முகவேல், முதல்வர் காளிதாசமுருகவேல்,  தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மற்றும்  உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Tags : professors ,Kovilpatti National College ,
× RELATED தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி