உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள் அளித்த திமுகவினரிடம் நேர்காணல்

உடன்குடி,டிச.5: திருச்செந்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக்கு போட்டியிட விருப்ப மனுக்கள் அளித்திருந்த திமுகவினரிடம் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ நேர்காணல் நடத்தினார். தண்டுபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம் தலைமை வகித்தார். மாணவர் அணி மாநில துணைஅமைப்பாளர் உமரிசங்கர், தெற்கு மாவட்ட துணைச்செயலாளர் ஆறுமுகபெருமாள், ஒன்றியச் செயலாளர்கள் உடன்குடி பாலசிங், திருச்செந்தூர் செங்குழி ரமேஷ், ஆழ்வார்திருநகரி நவீன்குமார்  முன்னிலை வகித்தனர். இதையடுத்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பு மனு கொடுத்த தெற்கு மாவட்ட திமுகவினருக்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ நேர்காணல் நடத்தினார். தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட  கவுன்சிலர், ஒன்றிய, நகர, பேரூராட்சி, வார்டு கவுன்சிலர்களுக்கு விருப்பமனு அளித்த திமுகவினரை தனித்தனியாக அழைத்து அவர்களிடம் நேர்காணல் நடத்தினார். இதில் மாவட்ட ஒன்றிய, நகர, கிளை திமுக நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Advertising
Advertising

Related Stories: