×

முள்ளக்காடு அருகே வேன் மோதி மின் ஊழியர் பலி

ஸ்பிக்நகர், டிச. 5:  முள்ளக்காடு அருகே ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் சாலையில் நடந்து சென்றபோது வேன் மோதி பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி அடுத்த முள்ளக்காடு அருகேயுள்ள சவேரியார்புரம் வேதக்கோவில் தெருவைச் சேர்ந்தவர் சண்முகம் (70). ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று காலை முள்ளக்காடு கணேஷ்நகரில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் பின்னோக்கி வந்த வேன்,  எதிர்பாராதவிதமாக இவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சண்முகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Power worker ,Mullakkadu ,
× RELATED பால் வேன் மோதி வாலிபர் பலி