உடன்குடியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை

உடன்குடி, டிச. 5: உடன்குடியில் அதிமுக ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தெற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். முன்னாள் மாவட்டச் செயலாளர் ஆறுமுகநயினார், முன்னாள் மாவட்டகவுன்சிலர் திருப்பாற்கடல், முன்னாள் சேர்மன் மல்லிகா, முன்னாள் பேரூரராட்சி தலைவர் ஆயிஷாகல்லாசி, தலைமைக்க ழக பேச்சாளர் பொன்ராம், மாவட்ட எம்ஜிஆர்மன்ற துணைசெயலாளர் மூர்த்தி முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்டச் செயலாளர் தாமோதரன் வரவேற்றார்.

கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் சண்முகநாதன் எம்.எல்.ஏ. பேசுகையில், ‘‘தமிழகத்தில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் உடன்குடி ஒன்றியத்தில் அதிமுக நூறு சதவீத வெற்றிபெற அயராது பாடுபட வேண்டும். கட்சி வேட்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’’ என்றார். கூட்டத்தில் உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர்  அஷாப, முன்னாள் தலைவர் சாமுவேல், நகர அதிமுக துணைச்செயலாளர் அப்துல்காதர், நிர்வாகிகள் மகேந்திரன்,  ராஜ்குமார், வேல்பாண்டி, வெள்ளத்துரை, மற்றும் ஊராட்சி, கிளைச் செயலாளர்கள் பங்கேற்றனர்.  ஏற்பாடுகளை ஒன்றியச் செயலாளர் முருங்கை மகராஜா செய்திருந்தார்.

Tags : executives ,AIADMK ,
× RELATED மயிலாடும்பாறை அருகே திமுக நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்