தூத்துக்குடியில் இருந்து மைனர் பெண்ணை மதுரைக்கு கடத்திச்சென்ற வாலிபர் கைது

தூத்துக்குடி, டிச. 5: தூத்துக்குடியில் இருந்து மைனர் பெண்ணை மதுரைக்கு கடத்திச் சென்ற வாலிபரை போலீசார் கைதுசெய்தனர். தூத்துக்குடியை  சேர்ந்த 17 வயது மைனர் பெண்ணை, திரேஸ்புரத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர், மதுரையில்  உள்ள தனது நண்பரின் உறவினர் வீட்டுக்கு கடத்தி சென்றார். இதனிடையே  மைனர் பெண்ணை காணாமல் பதறிய குடும்பத்தினர், தோழிகள், உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.  இதுகுறித்து தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர்.

அதன்பேரில் வழக்குப் பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் ஒரு வாரத்துக்கு பிறகு, கடத்திச்சென்ற  பெண்ணை வாலிபர் தனது வீட்டுக்கு அழைத்து  வந்தார். இதையடுத்து அங்கு சென்ற அனைத்து மகளிர் போலீசார், வாலிபரை கைதுசெய்ததோடு, மைனர் பெண்ணை மீட்டு தூத்துக்குடியில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் ஒப்படைத்தனர். தூத்துக்குடி திரேஸ்புரத்தில் அடுத்தடுத்து நடந்த சம்பவங்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Thoothukudi ,
× RELATED திருப்பத்தூர் அருகே 5 வயது சிறுமியை...